Header Ads

test

யாழில் மனைவியின் முன்னே நஞ்சருந்திய கணவன்.

 வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியை தாக்கி விட்டு, மனையின் கண்முன்னே விசம் அருந்திய கணவன், யாழ் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

 சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இளம் குடும்பப் பெண்ணொருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றுக்காலை குறித்த பெண்ணின் இரண்டாவது கணவன் வைத்தியசாலைக்குள் நுழைந்து, மனைவியை தாக்கி விட்டு, அவரிடமிருந்த சில ஆவணங்களை பறித்துச் சென்றுள்ளார்.

அதன்பின்னர் சற்று நேரம் கழித்து, மீண்டும் வைத்தியசாலைக்குள் நுழைந்து, மனைவி சிகிச்சை பெறும் விடுதிக்குள் சென்று மனைவியின் முன்பாகவே விசத்தினை அருந்தியுள்ளார். 

இதனையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் பின்பே அவர் ஏற்கனவே வீட்டில் நஞ்சருந்தி பின்பே வைத்தியசாலைக்கு வந்துள்ளார் எனவும்,போத்தலில் எஞ்சியிருந்ததையே மனைவி முன் குடித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் ஆபத்தான நிலையில் இருந்ததன் காரணத்தினால், உடனடியாகவே அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


No comments