பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், பெறுபேறு சான்றிதழ்களை திணைக்களத்திற்கு வருகைத் தராமல் பெற்றுக்கொள்ளும் நடைமுறையொன்றை பரீட்சைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பூஜித் ஜயசுந்தரவின் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பெறுபேறு சான்றிதழ்களை பரீட்சைகள் திணைக்களத்தின் WWW.DOENETS.LK என்ற இணையத்தளத்திற்கோ அல்லது DOE என்ற திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ கையடக்கத் தொலைபேசி செயலியின் (Mobile Application) ஊடாகவோ பிரவேசித்து, பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2001- ஆம் ஆண்டு அல்லது அதற்கு பின்னரான ஆண்டுகளில் தோற்றிய க.பொ.த (சா/த) மற்றும் உயர்தரம் பெறுபேறுகளை இணைய வழியாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறித்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்து 2001ம் ஆண்டுக்கு முன்னராக பெறுபேறு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, மின்னஞ்சல் மூலம் G.C.E (O/L) மற்றும் G.C.E (A/L) பரீட்சைகளுக்கான சுட்டெண்ணை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment