Header Ads

test

யாழில் கிளர்ந்தெழுந்த மக்கள் - சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பு.

   யாழ். குருநகர் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அவரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது.

இழுவை மடித்தொழிலை தடை செய்ய வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட தொழில் முறமைகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என சுமந்திரன் தலைமையில் கடந்த வாரம் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் சுமந்திரனின் கோரிக்கையால், உள்ளூரில் இழுவை மடி தொழில் செய்யும் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தே மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் மீனவர்கள் அடிமடி தொழில் செய்வதில்லை எனவும், இந்திய மீனவர்களே அடிமடி தொழில் செய்கின்றனர்.

இதன் காரணமாக கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன், உள்ளூர் மீனவர்களின் வலைகளை அறுத்து நாசம் செய்கின்றனர். இந்நிலையில் பொதுவாக இழுவை மடி தொழிலுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், உள்ளூர் மீனவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் எனவும் மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 





No comments