தனியார் காணியிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு.
வாழைச்சேனை காவல்துறை பிரிவில் வாகனேரி குளத்துமடு பிரதேசத்தில் தனியார் ஒருவரின் தோட்ட காணியில் பழைய மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன தெரிவித்தார்.
இது தொடர்பில்,குறித்த விவசாயி வாழைச்சேனை காவல்துறைக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டதாக காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இம்மோட்டார் குண்டு யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்றும் தற்போது விவசாய தேவைக்காக காணியில் துப்பரவு செய்யும் போது தென்பட்ட மோட்டர் குண்டு காவல்துறையினரால் மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment