பச்சை நிறமாக மாறிய கடலால் மீனவர்கள் அச்சம்.
மன்னாரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தமிழகத்தின் இராமநாதபுரம் கீழக்கரை கடலில் மீன்கள் உயிரிழந்து மிதப்பதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இராமநாதபுரத்தில் கீழக்கரையில் உள்ள ஜெட்டி பாலம், மீனவர் குப்பம், பாரதிநகர் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் நீர் மாற்றமடைந்து பச்சை நிறத்தில் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதனைத் தொடர்ந்து நேற்று கடலில் பல விதமான அரிய வகை மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளன.
இதன் காரணமாக கீழக்கரை பகுதியில் உள்ள மீனவர்கள் அச்சமடைந்துள்ள நிலையில்,மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி தமது அச்சத்தை நீக்கவேண்டுமென மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Post a Comment