Header Ads

test

யாழில் தாயையும் மகனையும் துன்புறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது.

 நாவற்குழியில் தாயையும் மகனையும் அடித்து துன்புறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் 2020ஆம் ஆண்டு தெல்லிப்பழையில் வீடொன்றில் 32 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

நாவற்குழியில் கடந்த சனிக்கிழமை வீடு ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் இருவர், அங்கு வசித்த தாயையும் மகனையும் கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கி நகைகளைத் தருமாறு துன்புறுத்தியுள்ளனர்.

பின்னர் 5 ஆயிரம் ரூபா பணத்தினையும் 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியினையும் கொள்ளையிட்டுத் தப்பித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வுப் பிரிவிற்கு சந்தேக நபர்கள் பற்றிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, 23 மற்றும் 26 வயதுகளையுடைய சந்தேக நபர்கள் இருவரையும் இன்று நாவற்குழிப் பகுதியில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

2020ஆம் ஆண்டு தெல்லிப்பழையிலுள்ள வீடு ஒன்றில் 32 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் இன்று கைது செய்யப்பட்ட இருவரும் முதன்மை சந்தேக நபர்கள் என விசாரனையில் கண்டறியப்பட்டுள்ளது.


No comments