சவேந்திர சில்வாவின் சீடன் என கூறி நிர்வாணமாக வீதியில் நடமாடிய நபர் கைது.
புத்தளம் பகுதியில் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் சீடன் தான் என வீதியில் ஆடையின்றி நின்று கத்தி கூச்சலிட்டவர் பொலிஸாரார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
அத்துடன் குறித்த நபர் ஆபாசமாக பேசியதாக பிரதேசவாசிகள், புத்தளம் பொலிஸாருக்கு 119 இலக்கத்தின் கீழ் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பல நாட்களாக இவ்வாறு நடந்து கொள்வதாகவும், ஆடையின்றி வீதியில் நடந்து செல்வதாகவும் அருகில் உள்ள முன்பள்ளியின் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்படவுள்ளார்.
Post a Comment