ஸ்கொட்லாந்துக்கு பயணமான ஜனாதிபதி கோட்டாபய
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ உள்ளிட்ட குழுவினர் ஸ்கொட்லாந்துக்கு பயணமாகியுள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை ஜனாதிபதி தலைமையிலான குழு நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்கொட்லாந்து − க்லாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஸ்கொட்லாந்தில் புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் திங்களன்று பாரிய கண்டனப்போராட்டத்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment