இலங்கை காவல் துறை தொடர்பில் வெளிவந்த தகவல்.
சிறிலங்கா காவல்துறை உத்தியோகத்தர்கள் 15,200 பேர் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.இதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
காவல்துறை உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள் தொடர்பில் அரச சேவைகள் ஆணைக்குழுவிடம் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத தாக்குதல்களில் இதுவரை சுமார் 3,000 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலில் சுமார் 230 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதவி உயர்வு மற்றும் காவல்துறை அதிகாரிகளின் நியமனத்தின் அவசியத்தை அமைச்சர் விளக்கியுள்ளார்.
இதுவரை 225 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால், அந்த பதவி உயர்வுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Post a Comment