மட்டக்களப்பில் இளைஞர் ஒருவருக்கு நள்ளிரவு வேளையில் நேர்ந்த சோகம்.
செட்டிபாளயத்தில் இரவுவேளை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளயத்தில் நேற்று இரவு (19) இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ்விபத்து சம்பவத்தில குறித்து தெரியவருவது,
மட்டகளப்பு கல்முனை பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் மோட்டர் சைக்கிள் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றிருப்பதாக தெரியவருகின்றது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment