Header Ads

test

இந்திய மீனவர்களின் அத்து மீறிய செயலால் உயிருக்கு போராடிய நிலையில் கரை திரும்பிய குருநகர் மீனவர்கள்.

 இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் யாழ்.குருநகர் மீனவர்களின் படகை மோதி தள்ளியதுடன், படகில் இருந்த மீனவர்களை கடலில் துாக்கி வீசுவதற்கு முயற்சித்துள்தாக கூறப்படுகின்றது.

குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக ஒரு படகில் மூவர் நேற்று 12 மணியளவில் தொழிலுக்குச் சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர் இலங்கை மீன்பிடி படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்தியது.

அத்தோடு படகில் இருந்தவர்களை தாக்கி படகில் இருந்த மூவரையும் கடலில் தூக்கிப்போட முயற்சித்துள்ளனர். இந்நிலையில் படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை திரும்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குருநகர் மீனவ சங்கம் கூறுகையில்,

எமது கடலில் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை, குறிப்பாக அத்துமீறிய இந்திய மீனவர்கள் எமது படகினை சேதப்படுத்தியதோடு மாத்திரமல்லாது படகில் இருந்த மீனவர்களின் உயிரைக் காப்பாற்றாது கடலுக்குள் தள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் எமது மீனவர்கள் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதாக குருநகர் மீனவ சங்கம் தெரிவித்ததுடன், இந்திய மீனவர்களின் இந்த அராஜக செயலுக்கு கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.


No comments