ஜனாதிபதி கோட்டபாயவின் புதல்வர் தந்தையை அமெரிக்கா வருமாறு அழைப்பு.
இலங்கை அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ள ஜனாதிபதியின் புதல்வரான மனோஜ் ராஜபக்ஷ, தனது தந்தையிடம் முன்வைத்த கோரிக்கை தொடர்பிலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய, தற்போது அவரது மகனது குடும்பத்தாருடன் தற்பொழுது உள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் நாடு திரும்பவுள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்கா சென்ற நாளிலிருந்து அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷ விசேடவேண்டுகோளினை முன்வைத்து வருவதாக அறியமுடிகின்றது.
அதாவது, அரசாங்கத்தையும் ஆட்சியையும் சரிவர நடத்திச் செல்ல முடியாதவாறு குடும்ப அங்கத்தவர்களே தந்தையின் காலைப்பிடித்து இழுத்தால், நாட்டின் ஆட்சியை ஒப்புக்கொடுத்துவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்கே வந்துவிடும்படி மனோஜ் ராஜபக்ஷ , தனது தந்தையான கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் கோரியதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment