வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற பாரிய விபத்து - ஒன்றன் பின் ஒன்றாக மூன்று வாகனங்கள் விபத்து.
வவுனியாவை அண்மித்த ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (05) மாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா நோக்கிச்சென்ற சொகுசு வாகனம், டிப்பர் வாகனம் மற்றும் பாரவூர்தி (லொறி) ஆகியன ஒன்றன் பின் ஒன்று பயணித்த வேளையில் திடீரென வவுனியா தாண்டிக்குளம் விவசாய பண்ணைக்கு அருகில் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த இவ் விபத்தில் சிவபாலன் (வயது 46) என்ற பாரவூர்தி சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டுள்ளனர்.
Post a Comment