யாழில் 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.
சங்கானை – தேவாலய வீதியை சேர்ந்த சிறுவன் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தவரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சங்கானை ஸ்தான அ.மி.த.க பாடசாலையில் கல்வி பயிலும் நிரோஜன் ஸ்டீபன் (வயது 06) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment