இலங்கையில் 56 கர்ப்பிணி பெண்கள் இதுவரை உயிரிழப்பு.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 56 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சுகாதார அமைச்சின் தாய் மற்றும் சேய் நல இயக்குனர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
நாட்டில் சுமார் 8,500 கர்ப்பிணிப் பெண்கள் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கடந்த வாரங்களில் கர்ப்பிணிப் பெண்களிடையே தொற்று பரவுவது குறைந்தபட்ச அளவில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
Post a Comment