53 திட்டங்களுடன் களமிறங்கியுள்ள வடக்கின் புதிய ஆளுநர்.
தமிழர் தாயகப் பிரதேசமான வட மாகாணத்தை சட்டத்தை மதிக்கின்ற, அமைதியான மற்றும் பாதுகாப்பான மாகாணமாக மாற்ற விரும்புவதாக வட மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா(Jeevan Thiagarajah) தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகளை, பொது மக்கள் வந்து சந்திப்பதற்கு அப்பால், அதிகாரிகள் மக்களைச் சென்று சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான வழிகளை ஏற்படுத்தும் வகையில், தானே நேரடியான சென்று மக்களை சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தின் புதிய ஆளுராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா, தன்னுடைய எதிர்கால திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது, வட பகுதி கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்த பிரச்சினைக்கான தீர்வு குறித்து துறைக்குப் பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாகவும், பிரச்சினைக்கு சுமூகமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணத்தை மையப்படுத்தி விவசாயம், கல்வி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட 53 விடயங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரல் ஒன்றின் அடிப்படையில் பணியாற்றத் தான் திட்டமிட்டுள்ளதாகவும், வடமாகாணத்தின் புதிய ஆளுராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாம் பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் மிகவும் மனவருத்தம் அடைந்துள்ளதாக கடந்த ஒன்றரை வருடமாக வடமாகாண ஆளுநராக கடமையாற்றிய பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்தார்.
புதிய ஆளுநர் நியமனம் தொடர்பில் தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment