5 வயது சிறுமிக்கு வாயில் நெருப்பால் சுட்ட தாய் - கிளிநொச்சியில் சம்பவம்.
கிளிநொச்சி அக்கரையான் விநாயகர் குடியிருப்பு பகுதியில் சிறுமிக்கு நெருப்பால் சுட்டதாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாயார் சமைத்து வைத்த பப்படத்தை 5 வயது சிறுமி தாயாருக்கு தெரியாமல் எடுத்து சாப்பிட்ட காரணத்தினால் தாயார் குழந்தையின் வாய்பகுதியில் சூடுவைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
சிறுமியின் தந்தை தொழிலுக்குச் சென்ற சமையம் இச்சம்பவம் நடைபெற்ற நிலையில் இந்த கொடூர சம்பவத்தை அவதானித்த சிறுமியின் பேரன் அக்கரையான் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்கரையான் பொலிசார் முன்னெடுத்துள்ளதுடன், கைதான பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Post a Comment