30,000ற்கும் மேற்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவைகளிலிருந்து விலகல்.
இலங்கையில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 30,000க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவைகளிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகளில் 75% மானவை (சுமார் 15,000 பேருந்துகள்) ஒரு மாதமாகச் சாலையில் செல்ல முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
பயணக்கட்டுப்பாடு காரணமாக, தமது வாழ்வாதாரத்தை இழந்த பெரும்பாலான ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வேறு வழியில் சம்பாதிக்கும் வழியைத் தேடிச் சென்றுள்ளனர் . அவர்களில் பலர் வாழ்க்கைக்காகச் சொந்தமாகச் சம்பாதிக்கும் திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இதுவரை அரசாங்கத்தால், அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நாடு மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் பல பேருந்துகள், வீதிகளுக்குத் திரும்பியுள்ளன. எனினும் உரிமையாளர்களாலேயே அவை இயக்கப்படுகின்றன.
நாடு மீண்டும் முடக்கலுக்குச் சென்றால்,தமது நிலை என்னவாகும் என்று பேருந்து உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தங்களுக்குத் தொழிலில் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அவர்களில் பெரும்பாலோர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டுள்ளனர் என்றும் விஜேரத்னே கூறியுள்ளார். இதேவேளை சுமார் 5,000 பேருந்துகளுக்கு பழுதுப்பார்தலுக்காக தனித்தனியே 50,000 செலவாகும்.ஆனால் எந்த வருமானமும் இல்லாமல், இந்த பேருந்துகளைப் பழுத்துப்பார்க்க வழி இல்லை என்றும் கெமுனு குறிப்பிட்டார். எனவே, அரசாங்கம் விரும்பியபடி போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்க முடியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment