மாத்தளையில் இடம்பெற்ற விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 13 பேருக்கு நேர்ந்த துயரம்.
மாத்தளையிலிருந்து செலகம வரை பயணித்த தனியார் பஸ்ஸொன்று மாத்தளை- கொலென்னேவத்த பகுதியில் விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த விபத்து சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களுள் 3 வயது குழந்தை ஒன்றும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றுமொரு வாகனமொன்றுக்கு இடமளித்த போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த மஹவெல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment