26.10.2021 இன்றைய நாள் எப்படி.
மேஷ ராசி அன்பர்களே!
இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல் படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று அம்பிகையை வழிபட காரியத் தடை கள் விலகும்
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
ரிஷப ராசி அன்பர்களே!
வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் அலைச்சலும் அதன் காரணமாக சோர்வும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபட சிரமங்கள் குறையும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
மிதுன ராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் சுபச் செலவாக இருப்பது மகிழ்ச்சி தரும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் பெரிதாக பாதிப்பு இருக்காது. விற்பனை வழக்கம்போல் நடைபெறும். இன்று விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.
கடக ராசி அன்பர்களே!
அனுகூலமான நாளாக இருக்கும்.சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சலும் சோர்வும் ஏற்படும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். மகா விஷ்ணுவை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
சிம்ம ராசி அன்பர்களே!
நண்பர்கள் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வீண் சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவது நன்று.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது அவசியம்.
கன்னி ராசி அன்பர்களே!
புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சியைத் தொடங்க உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாகும். நண்பர் களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கக்கூடும்.
துலா ராசி அன்பர்களே!
சொல்லிலும் செயலிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி உண்டாகும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணவரவு உண்டாகும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
விருச்சிக ராசி அன்பர்களே!
மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.
தனுசு ராசி அன்பர்களே!
நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்ப தற்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். இன்று ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.
மகர ராசி அன்பர்களே!
குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றச் செலவு செய்ய வேண்டிவரும். உறவினர்கள் மூல மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் மட்டும் சிறு அக்கறை செலுத்துவது அவசியம். அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம் என்பதால் வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு நண்பர்கள் வகையில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று நரசிம்மரை வழிபட நன்மைகள் சேரும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் கவனம் தேவை.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும்.
கும்ப ராசி அன்பர்களே!
மகிழ்ச்சி தரும் நாள். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். இன்று நீங்கள் பைரவரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணவரவு உண்டாகும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையால் ஆதாயம் பெறுவீர்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்.
மீன ராசி அன்பர்களே!
செயல்கள் வெற்றியாகும். உங்கள் தேவைகளை அறிந்து உறவினர்கள் உதவுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் படிப்படியாக நீங்கும். முக்கிய முடிவுகளை இன்று துணிந்து எடுக்கலாம். எதிர்பார்த்த பணவரவு இன்று உண்டாகும். செலவுகளும் அதிகரிக்கும். அனைவரோடும் பேசும்போது பேச்சில் மட்டும் கவனம் வைக்க வேண்டியது அவசியம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று மகாலட்சுமியை வழிபட பிரச்னைகள் நீங்கிவிடும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிலருக்கு திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டிவரலாம்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களிடம் பேசும்போது கனிவு அவசியம்.
Post a Comment