Header Ads

test

யாழில் 24 நாட்களேயான சிசுவை காவுகொண்ட கொவிட் வைரஸ்.

 யாழில் பிறந்து 24 நாட்களேயான சிசு உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.

அதன்படி யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த 24 நாட்களான சிசு , 63 வயதான பெண் மற்றும் 42 வயதான ஆண் ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

குறித்த சடலங்களுக்கு நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது கொவிட் தொற்றுள்ளமை  உறுதியாகியுள்ளது. அதனை அடுத்து அவர்களது சடலங்களை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய மின் தகனம் செய்யவதற்கான ஏற்பாடுகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


No comments