நாட்டில் 19 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.
நாட்டின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான சாத்தியமிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் தாக்கம் நாளை மதியம் 12.00 மணி வரை இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனர்த்த பேரிடர் முன்கூட்டிய எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மி.மீற்றருக்கு மேல் கன மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் குறித்த பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Post a Comment