இலங்கையில் 17வயதில் விமானியாகிய யுவதி.
இலங்கையில் 17 வயதான யுவதியொருவர் விமானம் செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
சத்னாரா பெர்னாண்டோ என்ற 17 வயதான யுவதியே இவ்வாறு விமானியாக பயிற்சியை பூர்த்தி செய்துள்ளார்.
இலங்கையில் காணப்படும் தனியார் விமான பயிற்சி நிறுவனமொன்றில் அவர் இந்த பயிற்சி நெறியை பூர்த்தி செய்துள்ளார்.
போர் இடம்பெற்ற காலத்தில் கிபீர் ரக யுத்த விமானங்கள் பறப்பதனை சிறு வயதில் பார்த்து விமானியாக வேண்டுமென திடசங்கற்பம் பூண்டதாக சத்னாரா குறிப்பிடுகின்றார்.
தற்பொழுது தனியார் விமானமொன்றை செலுத்துவதற்கான தகுதியை செத்னாரா பெற்றுக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் மேலும் கற்று வர்த்தக விமானமொன்றை செலுத்துவதற்கு தாம் முயற்சிப்பதாக சத்னாரா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment