Header Ads

test

உணவு விசமானதால் 15 இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதி.

 உணவு விசமானதில் சுகவீனமுற்ற மட்டக்களப்பு வாகரை 233 படைப்பிரிவின் தலைமையக முகாமைச் சேர்ந்த 15 இராணுவத்தினர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 15 பேர் இன்றைய தினமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உணவுக்கு பின்னர் புடிங் சிற்றுண்டியை உண்ட பின்னர் இவர்களுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எவரும் ஆபத்தான நிலைமையில் இல்லை என இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.



No comments