15 வயது சிறுமிக்கு ஏற்பட்ட துயரத்தால் வைத்தியசாலையில் அனுமதி.
மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கந்தனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கந்தான காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுமி தனது வீட்டில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் கொழும்பில் உள்ள ஒரு பாடசாலையில் கல்வி பயிலும் 13 ஆம் ஆண்டு மாணவர் என்றும் ருகஹவில, வல்போலாவைச் சேர்ந்தவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபரின் தந்தை அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் கணக்காளர் என்பதும், தாய் ஒரு அரசு மருத்துவமனையில் தாதி என்பதும் தெரியவந்துள்ளது.
Post a Comment