இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பாரிய விபத்து - 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி.
இ.போ.ச. பேருந்தொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 14 பேர் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விபத்து சம்பவம் ஹல்துமுல்ல - களுபான இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. பலாங்கொடையிலிருந்து பண்டாரவளையை நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச. பஸ், எதிர்த்திசையில் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவருடன் பஸ்ஸில் பயணித்த 11 பேரும் காயங்களுக்குள்ளான நிலையில் ஹல்துமுல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இந்த விபத்து குறித்த விசாரணைகளை ஹல்துமுல்ல பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment