மின்னல் தாக்குதலில் உயிரைவிட்ட 12 வயது சிறுமி.
குருநாகல் - மஹவ பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று சீரற்ற வானிலை நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் பன்வெள, பலல்ல பிரேதேசத்தை சேர்ந்த சிறுமியே இவ்வாறு மின்னல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் சிறுமி தனது வீட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில் மின்னல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அதனையடுத்து எரிகாயங்களுடன் நாகொல்லாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Post a Comment