Header Ads

test

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயன் படகு கண்டுபிடிப்பு.

 தென் மெக்ஸிகோவில் 1000 ஆண்டுகள் பழமையான மரத்தால் ஆன மாயன் படகு ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

5 அடிக்கு மேல் அளவுள்ள இந்த படகானது அழிந்து போன மாயன் நகரமான சிச்சென் இட்சாவிற்கு அருகில் உள்ள ஒரு நன்னீர் குளத்தில் மூழ்கிக்கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தண்ணீரை பிரித்தெடுக்க அல்லது சடங்கு சம்பிரதாயங்களைச்  செய்ய பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயா தொடருந்து எனப்படும் புதிய சுற்றுலா தொடருந்துப் பாதையின் கட்டுமானப் பனியின் போதே இந்த அரிய கண்டுபிடிப்பு கிடைத்துள்ளது.

அத்துடன் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் மட்பாண்டங்கள், சடங்குக் கத்தி மற்றும் சினோட் என்று அழைக்கப்படும் குளத்தில் ஒரு பாறை முகத்தில் கைகளால் வரைந்த சிவரோவியங்களையும் கண்டுபிடித்துள்ளனர் என தெரிவித்தனர். மாயன் நாகரிகத்தின் பொற்காலத்தின் முடிவில், 830-950 கி.பி.க்கு இடைப்பட்ட காலத்தில், படகு தற்காலிகமாக திகதியிடப்பட்டுள்ளது.  


No comments