Header Ads

test

ஆப்கானிஸ்தானில் உடல் சிதறி 100 பலி.

  ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குந்தூஸ் மகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 100 பேர் பலியானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும், ஐஎஸ் பயங்கரவாத இயக்கமே சமீப காலமாக அங்கு இத்தகைய கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப்படைகள் வெளியேறிய பிறகு அங்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது இருக்கும் என கூறப்படுகிறது.


No comments