மின்னல் தாக்கி இளம் குடும்பஸ்த்தர் பலி.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் கரைவலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மின்னல் தாக்கி ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் மயக்கமுற்ற நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தச்சம்பவம் இன்று மதியம் 12:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
மின்னல் தாக்கத்தில் உயிரிழந்தவர் 35 வயதுடைய ஜோன் தோமசன் குயின்ரன் சுதர்சன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். மேலதிக விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment