Header Ads

test

கொவிட் தடுப்பூசி பெறச் சென்றவர்கள் மீது பொலிஸ் பரிசோதகர் தாக்குதல் - விசாரணைகள் ஆரம்பம்.

 வெலிகம பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசியை பெறச்சென்றவர்கள் மீது பொலிஸ் பரிசோதகர் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

அத்துடன் சம்பவம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த முதலாம் திகதி மாத்தறை வெலிகமவில் குறித்த நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட தடுப்பூசிகள் காலாவதியாகியமை காரணமாக தடுப்பூசி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து தடுப்பூசி முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பொது மக்கள் தொடர்ந்து அங்கு தங்கியதால் பொலிஸார் அவர்களை வெளியேறுமாறு அறிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வெலிகம பொலிஸ் பரிசோதகர் மற்றும் பிற அதிகாரிகள் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது பொலிஸார் அங்கிருந்த பொதும்க்கள் சிலர் மீது தடியடி நடத்தியதாக கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments