Header Ads

test

விபரீத முடிவால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்.

 யாழ்ப்பாணம் தென்மராட்சியின் எழுதுமட்டுவாழ் கரம்பகம் பகுதியினைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கரம்பகம் பகுதியில் தாயாருடன் தனித்து வாழ்ந்த 11 வயதுச் சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.

இதனிடையே பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது தெரிவித்துள்ளனர், நேற்றுக் காலை குறித்த சிறுமி உயிரிழந்ததாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எழுதுமட்டுவாழ் - கரம்பகம் பகுதியில் கடந்த 08 மாதங்களாக உறவினர் ஒருவரின் வீட்டில் குறித்த சிறுமியும் தாயாரும் வசித்து வந்துள்ளனர்.

இதேவேளை, சிறுமிக்கு நேற்றுமுன்தினம் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனாப் பரிசோதனையின்போது கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments