கை,கால்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் வீதி ஓரத்தில் காணப்பட்ட பெண்
அம்பாறையில் கை, கால்கள் கட்டப்பட்டு வீதியோராத்தில் கைவிடப்பட்ட நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்ட பெண் சிகிச்சைகளுக்காக அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி தனது மகள் கடத்தப்பட்டதாக, குறித்த பெண்ணின் தாய், வென்னப்புவ கந்தானகெதர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந் நிலையிலேயே அம்பாறை தமன, சீனவத்த பிரதேசத்திலுள்ள வீதியொன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலேயே குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment