இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய்க்கு நேர்ந்த சோகம்.
யாழில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாயார் கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
யாழ்ப்பாணம் இணுவிலை சேர்ந்த அஜந்தன் இனியா என்ற 25 வயதான இளம் பெண்ணே இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 4ம் திகதி மூச்சு விடுவதில் சிரமப்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு அன்றைய தினமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் 8ம் திகதி இரட்டை குழந்தைகள் சுகயீனமடைந்த தாய் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் தொிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த இரட்டை குழந்தைகள் தற்பொழுது யாழ்.போதனா வைத்தியசாலையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment