Header Ads

test

ஊரடங்கு நீடிப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்தப்படுமா என்பது குறித்து நாளை தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொரோனா ஒழிப்பு செயலணியின் வாராந்த மீளாய்வுக்கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இதன்போதே நாட்டின் தற்போதைய நிலைமை மீளாய்வு செய்யப்பட்டு, தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி பெரும்பாலும் கடும் சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படலாம் எனவும், எனினும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments