Header Ads

test

யாழில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பிணையில் விடுதலை.

 யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து  இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

 தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை யாழ். பொலிசாரினால்  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இந் நிலையில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்ட இவர்களுக்கான வழக்கு விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments