பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலால் நிலைகுலைந்துபோன பொலிஸார்.
யாழ்ப்பாணம், கொடிகாமம், குடமியன் பகுதியில் உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டுகள் இரண்டு இன்று (16) மாலை மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாழடைந்த காணி ஒன்றிற்கருகில் அமைந்துள்ள குளத்துடன் உள்ள பற்றைக் காட்டிலிருந்து குறித்த வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய 15 கிலோ கிராம் மற்றும் 10 கிலோ கிராம் நிறையுடைய வெடி குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment