Header Ads

test

யாழில் கணவனை திருவலைக்கட்டையால் பதம் பார்த்த மனைவி.

 யாழ்ப்பானம் - பூம்பகார் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் திருவலையினால் அடித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் - மனைவிக்டையே ஏற்பட்ட முரண்பாடு முற்றியதன் காரணமாகவே நேற்றிரவு திருவலைக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்துள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது துரைராசா செல்வராசா என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த இவர் ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் முடித்து பூம்புகாரில் வசித்து வந்துள்ளார்.

மேசன் தொழிலில் ஈடுபட்டுவரும் குறித்த நபருக்கும்  மனைவிக்குமிடையில் சில நாட்கள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன்  குறித்த முரண்பாடு முற்றிய நிலையில் நேற்றிரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments