Header Ads

test

நடு வீதியில் தனக்குத்தானே தீ மூட்டிய நபரால் ஏற்பட்ட பரபரப்பு.

 கொழும்பு - கறுவாத்தோட்டம் பகுதியில் நபரொருவர், தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு முன்பாக நேற்று மாலை இடம்பெற்றதாகவும் கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ வைத்துக்கொண்ட நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் தீ காயங்களுக்கு உள்ளான நபரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் தீ வைத்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


No comments