யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்த்தர் பலி.
யாழ்.கோப்பாய் - இராசபாதை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தானது இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்துத் தொடர்பில் தெரியவருகையில்,
கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள ஆலயம் ஒன்றுக்குச் சென்றுவிட்டு கோப்பாய் நோக்கி முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்த போது எதிரே வந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான வாகனம் திடீரென திருப்ப முற்பட்ட வேளை முச்சக்கர வண்டியை மதிலோடு சேர்த்து மோதித் தள்ளியுள்ளது.
குறித்த விபத்தின் போது அப்பகுதியில் குழாய்க்கிணறு உருவாக்கும் தொழில் மேற்கொண்டுவரும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய இலங்கை மின்சாரசபைக்குச் சொந்தமான வாகனத்தையும் விபத்திற்கு உள்ளான முச்சக்கர வண்டியையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment