Header Ads

test

அரசாங்கம் மூடி மறைக்கின்றது என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டு.

 பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் மேற்கொள்ளும்  பயணத்தை நாம் நிராகரிக்கின்றோம். இவர்கள் உண்மையை மூடி மறைக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர். இவர்கள் போப் பாண்டவரையும் தவறாக வழிநடத்தவே முனைகின்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -

நாம் எதிர்பார்க்கும் நியாயத்தை வழங்காமல், அரசாங்கத்திற்கு சார்பான வகையில் தீர்மானங்களை மேற்கொண்டு உண்மையை மறைக்க பயன்படும் மற்றுமொரு துருப்புச் சீட்டே இந்த விடயம். இரண்டரை வருடங்களாக மக்கள் உண்மை வெளிப்படுத்தப்படும் என நம்பியிருந்து ஏமாந்துவிட்டனர்.

இவர்கள் இன்று சர்வதேசத்தை அணுகுவதால், எமது நிலைப்பாடு என்னவென்பதை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதை சர்வதேசத்திற்கு நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். நாம் சர்வதேசத்தை தவறாக வழிநடத்துவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அரசாங்கம் சர்வதேசத்தை நாடுமெனின், எமக்கு வேறு வழியில்லை. நாமும் அதனை நாடுவோம். ஜனாதிபதிக்கு அனைத்து விடயத்தையும் தெரிவித்து ஜுலை மாதத்தில் கடிதமொன்றை அனுப்பிய போதிலும் பிரச்சினையை மூடிமறைக்கின்ற பதிலைத்தான் அவர் வழங்கினார்.

இது  தொடர்பில் வத்திகான் ஊடாக ஜெனீவாவில் எமது விடயத்தை முன்வைப்பதை விட வேறு வழியில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.


No comments