மஹிந்த அவசர அவசரமாக பிறப்பித்த அதிரடி உத்தரவு.
கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களைக் கொண்ட கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கும், சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கும் பிரதமரினால் விடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் உள்ள சிரமம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இவ்வாறான நிலையிலேயே பிரதமர் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை சுமார் 800 கொள்கலன்கள் வரையான இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏற்கனவே துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதங்களுக்கு போதுமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதற்காக உணவுப் பொருட்களின் பங்குகளை விரைவில் விடுவிப்பது அவசியம் எனவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.
மேலும் அவ்வாறு இல்லையெனில், அனைத்து இறக்குமதிகளும் நிறுத்தப்படுவதுடன், நாட்டின் அத்தியாவசிய உணவு பொருட்கள் ஒக்டோபர் மாத இறுதி வரை மட்டுமே கிடைக்கும் என இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment