Header Ads

test

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னுமொரு ஆபத்து.

 இலங்கையில் அடுத்த மாதத்தின் பின்னர் மின்சார விநியோகத்தில் சிக்கல் நிலைமை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சாரம் பயன்படுத்தும் மக்கள் 44 பில்லியன் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தாமையினால் இந்த நிலைமை ஏற்படும் அபாயம் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மக்கள் உடனடியாக மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

எனினும் மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் வகையில் மின்சார தடை செய்து மக்களை சிரமத்திற்குள்ளாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளாது.

எனினும் தொடர்ந்தும் அதனை மேற்கொள்ள முடியாது. இதன் காரணமாக அடுத்த மாதத்தின் பின்னர் மின்சாரம் வழங்குவதற்கு சிக்கல் நிலைமை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments