அரசாங்கத்திற்கு பந்தம் பிடிப்பவரே அங்கஜன் இராமநாதன் என கடுமையாக சாடியுள்ள க.வி.விக்கினேஸ்வரன்.
அரசாங்கத்துடன் ஒட்டி ஒட்டுண்ணியை போல ஒட்டிக்கொண்டு பந்தம் பிடிப்பவரே அங்கஜன் இராமநாதன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஜெனீவா என்பது நாடகமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கருத்து தெரிவித்தமை தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் -
நாமல் கழிப்பறைக்குச் சென்றாலும் பின்னால் செல்பவர், அவருக்கு ஏதோ ஒரு சில வாக்குகள் கிடைத்துவிட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
ஆனால் அடுத்த முறை அங்கஜனுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அவருடைய கூற்றை நாங்கள் முக்கியமாக கருத வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.
Post a Comment