வவுனியாவில் பசுவை வெட்டி குளத்தில் போட்ட விசமிகள்.
வவுனியாவில் கன்று ஈனும் நிலையில் இருந்த பசுமாடு ஒன்றினை கத்தியால் வெட்டிய விசமிகள் அதனை அருகில் உள்ள குளத்தில் எறிந்துள்ளனர்.
இச்சம்பவம் தவசிகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா தவசிகுளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் நல்லின வளர்ப்பு மாடு கடந்த இருதினங்களாக காணாமல் போயுள்ளது.
இதனையடுத்து அவர் தேடுதல் மேற்கொண்டபோது அவரது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள குளத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டது.
குறித்த பசுமாட்டின் தலை மற்றும் உடல் பகுதிகள் கூரிய ஆயுதத்தால்
அறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment