Header Ads

test

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டாலும் உயிராபத்து -சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு.

 இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டாலும் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் உயிராபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

உயிராபத்துக்களை குறைப்பதற்காகவே தடுப்பூசிகள் என்றாலும், மக்கள் சுகாதார விதிமுறைகளை நிச்சயமாக பின்பற்ற வேண்டும்.

அதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை அண்மித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க நேற்றுக் காலை வரை கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 4,98,694 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர்களில் 58 ஆயிரத்து 287 பேர் தொடர்ந்தும் பல்வேறு வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோரின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 11 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments