Header Ads

test

யாழில் குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.

 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணொருவர் குழந்தை பிரசவித்த பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் அளவெட்டியை சேர்ந்த சதீஸ்குமார் அபிமினி (42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த தாயார் கடந்த 8ஆம் திகதி உடல்நலக் குறைவுடன்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானதுடன் 8ஆம் திகதி குழந்தை பிரசவித்தார்.

தாயாருக்கு தொடர்ந்து கொரோனா சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (14) உயிரிழந்துள்ளார். எனினும், குழந்தை நலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments