இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த சாதகமான பதில்.
இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (08) சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.
மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் மத நல்லிணக்கம், மத சார்பின்மை கோட்பாடுகளுக்கு உகந்ததாக இல்லை.
இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம் குறித்த திருத்தச் சட்டம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் எனத் தெரிவித்த அவர், சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை மத்திய அரசு மறுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment