நாட்டில் மீண்டும் தலை தூக்கியுள்ள துப்பாக்கி கலாச்சாரம்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளதாக காவல்துறையின் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்
வீரகெட்டிய - வெகந்தவெல பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதுடன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment