நெதர்லாந்தில் பரிதாபகரமாக உயிரிழந்த யாழ் தமிழர்.
நெதர்லாந்தின் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி காலை பூந்தோட்ட தொழிற்சாலை ஒன்றில் விபத்து இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் இருபாலையைச் சொந்த இடமாகக் கொண்டவரும் நெதர்லாந்தில் நீண்டகாலம் வசித்தவருமான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தொழிற்சாலையில் பூந்தோட்ட மண்ணை நிரப்பும் பாரிய கொள்கலன் ஒன்றில் இருந்து கொட்டப்பட்ட மண்ணில் சிக்குண்டு சிறிதுநேரம் கவனிப்பாரின்றிக் கிடந்த அவர் பின்னர் சுயநினைவிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவசரமாக அம்புலன்ஸ் ஹெலிக்கொப்ரர் வரவழைக்கப்பட்டு மருத்துவர் ஒருவரது கண்காணிப்பில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
எனினும் நீண்ட நேரம் மண்ணில் புதையுண்டு கிடந்ததால் மூச்சிழந்து கோமா மயக்க நிலையை அடைந்திருந்த அவர் சில நாட்களின் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment